உலகத்தின் புகழ் வாய்ந்த புகைப்படங்களை பார்த்திருப்போம்.. என்னைப் பொறுத்தவரை ஒருவர் தன் வாழ்வில் எடுத்த படங்களில் எது சிறப்பானதாக அல்லது முக்கியமானதாக இருக்கும்? என்னும் கேள்விக்கு எவருமே 'இனிமேல் நான் எடுக்கப் போவதே முக்கியமானது' என்று சொல்வார். ஜான் கீட்ஸ் 'நான் கேட்ட கீதங்கள் இனியவை, இனிக்கேட்க இருப்பவை நனிசிறந்தவை' (“Heard Melodies Are Sweet, but Those Unheard Are Sweeter” - John Keats in “Ode on a Grecian Urn” ) என்று சொன்னது போல . அது மனித இயல்பு..
பிலிப்பைன்சில், திருமணப் புகைப்படக்காரரகவும், கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ஒருவர் மிக முக்கியமான புகைப்படத்தை எடுத்துவிட்டார்.. இனி அவரால் அதை விட முக்கியமான படத்தை எடுக்கவே முடியாது.. உண்மையில் அவரால் எந்தப் படத்தையுமே எடுக்க முடியாது.. ஏனென்றால் அவர் அந்த புகைப்படத்தை எடுத்த வினாடியே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரால் எடுக்கப்பட்ட அந்தப்படம் முக்கியமானது. ஏனென்றால் அதில் அவர் தன்னை சுட்டவர்களைப் படம் பிடித்துவிட்டார்..
அவர் பெயர் ரேனால்டோ டக்ஸா . பிலிப்பைன்சில், காலூகன் சிட்டி என்னும் சிறு நகரத்தில் வாழ்ந்து வந்தார். அவர் ரவுடிகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுத்ததனால் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. போட்டோவை வைத்து, கொலை செய்தவர்களை போலீஸ் இரு நாட்களில் பிடித்துவிட்டனர். சுட்ட நபரின் முகம் துப்பாக்கியால் மறைக்கப் பட்டிருந்தாலும், மற்றொரு கொலைகாரரின் முகம் நன்றாகவே தெரிந்தது.. பாதுகாப்புக் கருதி டக்ஸா குடும்பத்தினரின் முகம் போட்டோவில் மங்கவைக்கப் பட்டுள்ளது.
Caloocan city, north of Manila, Philippines, Tuesday, Jan. 4, 2011.
Dagsa, a local councilman and a wedding photographer, was taking pictures of his family outside their home to welcome the new year early Jan. 1, when he slumped on the pavement from an assassin's bullet. His last frame showed clearly the alleged assassin, Frederick Sales, aiming his pistol behind smiling members of his family. Police said Sales and another man, who acted as a lookout, were arrested Monday
No comments:
Post a Comment